Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டைட்டானிக் கப்பலின் கடைசி பயணி மரணம்

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2009 (13:05 IST)
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசி பயணியும ் அவரது 97வது வயதில் மரணம் அடைந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்த அ‌ந்த பய‌ணி‌யி‌ன் பெய‌ர் மில்லிவினா டீன்.

மூ‌ழ்கவே ‌மூ‌ழ்காது எ‌ன்ற முழ‌க்க‌த்துட‌ன், இங்கிலாந்து நாட்டில் உள்ள லிவர்பூல் நகரில் இருந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ‌பெரு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌ப்புட‌ன் புற‌ப்ப‌ட்ட டைட்டானிக் சொகுசுக்கப்பல் தனது முத‌ல் பயண‌த்‌திலேயே ‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி‌ல் மூ‌ழ்‌கியது.

டை‌ட்டா‌‌னி‌க் கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் சென்றபோது பனிப்பாறையில் மோதியது. இதனால் கப்பலில் ஓட்டை விழுந்து கடல் தண்ணீர் கப்பலுக்குள் புகுந்து, கப்பல் கடலில் மூழ்கியது. இந்த விபத்து 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந்தேதி நே‌ரி‌ட்டது.

இதில் பயணம் செய்த பயணிகளில் 1,517 பேர் கடலில் மூழ்கினார்கள். 706 பேர் உயிர் பிழைத்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ம‌ற்று‌ம் சிறுவர்கள் ஆவார்கள். அப்படி தப்பிப்பிழைத்தவர்களில் மில்லிவினா டீன் என்ற பெண்ணும் ஒருவர்.

இந்த விபத்து நடந்தபோது மில்லிவினா டீன் 2 மாத குழந்தையாக இருந்தார். குழந்தையாக இருந்த அவர் தன் தாய், தந்தை, அண்ணன் ஆகியோருடன் இந்த கப்பலில் பயணம் செய்தார். கப்பலுக்குள் தண்ணீர் புகுந்ததும், கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்க தொடங்கியது. அப்போது டீ‌னி‌ன் த‌ந்தை, அவரது மனை‌வி ம‌ற்று‌ம் மக‌ன் ம‌ற்று‌ம் டீனை உயிர் காக்கும் படகில் வைத்து தப்பிக்க வைத்தார். இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் டீ‌னி‌ன் த‌ந்தை மரண‌ம் அடை‌ந்தா‌ர்.

படகு மூலம் தப்பிப்பிழைத்த அவர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மில்லிவினா டீன் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் தான் கடைசி வரை வாழ்ந்து வந்தார். அவர் தான் இந்த கப்பலில் பயணம் செய்தவர்களில் கடைசியாக உயிர் வாழ்ந்தவர். அவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கத்திலேயே மரணம் அடைந்தார். மரணம் அடையும்போது அவருக்கு வயது 97. அவர் இறந்த அன்று தான் டைட்டானிக் கப்பல் கடலில் பயணத்தை தொடங்கிய 98-வது ஆண்டு தினம் ஆகும்.

‌‌ திருமணமே செ‌ய்து கொ‌ள்ளாம‌ல் வா‌ழ்‌ந்த ‌மி‌ல்‌லி‌வினா, ஒரு ‌நிறுவன‌த்‌தில‌் ப‌ணியா‌ற்‌றி ஓய்வு பெற்றவ‌ர். இவ‌ர் கை‌க்குழ‌ந்தையாக இரு‌ந்த காரண‌த்தா‌ல், டை‌ட்டா‌னி‌க் க‌‌ப்ப‌லி‌ல் பயண‌ம் செ‌ய்தது ப‌ற்‌றி எந்த ஞாபகமும் இல்லை அவரு‌க்கு இ‌ல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

Show comments