Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுத்தாளர் சுஜாதா மறைவு!

Webdunia
ஞாயிறு, 15 ஜூன் 2008 (12:53 IST)
இருதய நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா நேற்றிரவு சென்னையில் உ‌ள்ள அ‌ல்ப‌ல்லோ மரு‌த்துவமனை‌யி‌ல் மரணம் அடைந்தார்.

சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஜட்ஜ் சுந்தரம் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் எழுத்தாளர் சுஜாதா. 73 வயதான இவ‌ர், இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந ்தா‌ர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு `பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென உடல் நிலைக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை அப்பல்லோ மரு‌த்துவமனை‌யி‌ல் அனுமதிக்கப்பட்டார். அங்கு ‌ சி‌கி‌ச்சை பல‌னி‌ற்‌சி நேற்றிரவு 10.30 ம‌ணி‌க்க சுஜாதா மரணம் அடைந்தார். அப்போது அருகில் அவரது மனைவி இருந்தார்.

சுஜாதாவின் இரு மகன்களும் அமெரிக்காவில் உள்ளனர். சுஜாதாவின் மரணம் பற்றி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும் வெள்ளிக்கிழமை சுஜாதாவின் இறுதிச்சடங்கு நடைபெறும். அதுவரை சுஜாதாவின் உடல் அப்பல்லோ மரு‌த்துவனமை‌யி‌ல் வைக்கப்பட்டு இருக்கும்.

சுஜாதா 100-க்கும் மேற்பட்ட நாவல்களும், 200-க்கும் மேலான சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். 15 நாடகங்களும் எழுதியுள்ளார ். சுஜாதாவுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

Show comments