Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 2020 - எண்ணியல் பலன்கள்: 4, 13, 22, 31

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (20:37 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
வேகமான நடவடிக்கைகளால் முன்னேற்றம் காணும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். வழக்குகளில் இருந்து வந்த சோதனைகள் மாறும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். நண்பர்கள்  பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பார்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம்  அனுகூலம் உண்டாகும்.

தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். 
 
பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். கோதுமை கஞ்சி செய்து பிரசாத விநியோகம் செய்வது நல்லது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments