நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-3, 12, 21, 30

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2014 (12:06 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தைரியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு,  வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக சில பணிகளை செய்வார்கள்.

கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். மாதத்தின் முற்பகுதியில் வாகன விபத்து,  அலைச்சல்,  மனஉளைச்சல்,  மனைவி வழியில் மனத்தாங்கல் வந்து நீங்கும். மாதத்தின் பிற்பகுதியில் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். நட்பு வட்டம் விரியும்.

கன்னிப் பெண்களே! காதல் விஷயங்களை ஓரங்கட்டிவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத்துறையினர்களே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டிய மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்:3, 12, 15, 27
அதிர்ஷ்ட எண்கள்:6, 9
அதிர்ஷ்ட நிறங்கள்:மயில்நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட கிழமைகள்:செவ்வாய், வியாழன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments