Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

Webdunia
திங்கள், 1 மே 2017 (14:55 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் ரசனைக் கேற்ப சொத்து வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்-. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்.


 


குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். ஆனால் பழைய நண்பர்களால் தொல்லைகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அலைச்சல் குறையும். எதிர்பார்த்த பதவிகள் தேடி வரும். அரசியலில் செல்வாக்குக் கூடும்.

அரசியல்வாதிகளே! இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள்.

கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களின் நிர்வாகத் திறனைப் பாராட்டுவார்.

கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். புரட்சிகரமான முடிவுகள் எடுக்கும் மாதமிது. 
 
    
அதிஷ்ட தேதிகள்: 4, 1, 8, 17, 26
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை 
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments