6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தட்டு தடுமாறிய காரியங்களெல்லாம் கைக்கூடும். மன தைரியம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் கல்யாணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். பிள்ளைகளின் நீண்ட நாள் கனவுகளை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள்.
சகோதர வகையில் உதவிகளுண்டு. என்றாலும் முற்பகுதியில் வீண் அலைச்சலும், மன உளைச்சலும் ஒருபக்கம் இருந்தாலும் வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றி பெருமை பேசுவார்கள். அம்மாவுக்கு உடல் நிலை சீராகும். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். வேற்று மதத்தினரால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுசு வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.
கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பழைய தவறுகள் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக் கொள்ளுவீர்கள்.
கலைத்துறையினரே! உதாசினப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் மாதமிது.