Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2017 (21:09 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் திடீர் யோகம், பணவரவு உண்டாகும்.


 


வழக்கில் வெற்றி உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளால் இருந்த பிரச்னைகள் நீங்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புது வீடு வாங்குவீர்கள். திருமணம், கிரகப் பிரவேசம் முன்னின்று நடத்துவீர்கள். வேலைக் கிடைக்கும். பழைய உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். வி. ஐ. பிகளின் தொடர்பு கிடைக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால் உடல் வலி, களைப்பு வந்துப் போகும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சி உறுதுணையாக இருப்பார்கள். மனைவிவழியில் அனுகூலம் உண்டு. திருமணம் முடியாதவர்களுக்கு முடியும். தந்தைவழியில் மதிப்புக் கூடும். திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் தேடி வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 
 
அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள். 
 
கன்னிப் பெண்களே! கெட்ட பழக்கங்களிலிருந்தும், கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்யோகத்தில் உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுக்காக மேலதி£ரியிடம் பரிந்துப் பேசுவீர்கள். 
 
கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 5, 8, 15, 14, 24
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஆலிவ்பச்சை 
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments