Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (13:01 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் உலக அனுபவ அறிவை பெற்றவரும், அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடியவரான மூன்றாம் எண் அன்பர்களே


இந்த மாதம் சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி  கிடைக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்கு தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் இருக்கும். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது.

பெண்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments