3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
பெரிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மூத்த சகோதரர் மனம் விட்டு பேசுவார். ஷேர் மூலம் லாபம் வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வழக்கில் வெற்றி உண்டு. பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண முயற்சிகள் அலைச்சலின் பேரில் முடியும்.
புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரசியவாதிகளே! தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொண்டு புகழடைவீர்கள்.
கன்னிப் பெண்களே! பழைய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உயரதிகாரி பாராட்டுவார். கலைத்துறையினர்களே! வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். சுற்றியிருப்பவரின் சுயரூபத்தை அறியும் மாதமிது.