Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9,18,27

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (19:59 IST)
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அவர்களின் உடல் நிலை சீராகும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. பிதுர்வழி சொத்து கைக்கு வரும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கி லோன் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அவ்வப்போது வருங்காலத்தைப் பற்றி ஒரு பயம் இருக்கும். யாரையும் நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சில முக்கிய விஷயங்களுக்கெல்லாம் நீங்களே சென்று வருவது நல்லது. அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் புதுத் தொடர்புகள் கிடைக்கும். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாக்கி சம்பளத் தொகைக் கைக்கு வரும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் மாதமிது.   
 
அதிஷ்ட தேதிகள்:1,3,6,9,12   
அதிஷ்ட எண்கள்:7,9
அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம்,பழுப்பு
அதிஷ்ட கிழமைகள்:ஞாயிறு,சனி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments