Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26
, திங்கள், 30 நவம்பர் 2015 (17:44 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்களிடம் இருந்து வந்த பகை நீங்கும்.

உறவினர்களும் ஒத்தாசையாக இருப்பார்கள். வேற்றுமொழிப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். புறநகர் பகுதியில் இருந்த ஒரு இடத்தை நீங்கள் விற்க வேண்டி வரும். அதன்மூலம் கடன் பிரச்னையில் ஒருபகுதி தீர வாய்ப்பிருக்கிறது.
 
புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கி லோன் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் மாதத்தின் பிற்பகுதியில் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்துக் கொள்வார்கள்.
 
சில நேரங்களில் நம்பிக்கை இல்லாமல் போகும். உடன்பிறந்தவர்களால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். குடும்ப வருமானம் உயரவில்லை ஆனால் தேவைகளும், செலவுகளும் பெருகிக் கொண்டே போகிறதே எப்படி நாம் சமாளிக்க போகிறோமோ என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! மேலிடத்திற்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். காதல் கைக்கூடும். வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் இருந்து வந்த உரசல் போக்கு நீங்கும். சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும்.
 
கலைத்துறையினர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். எதிர்பாராத சந்திப்புகளும், திடீர் திருப்பங்களும் நிறைந்த மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 5, 6, 14, 15, 17
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

Share this Story:

Follow Webdunia tamil