Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25
, திங்கள், 30 நவம்பர் 2015 (17:42 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் உங்களின் எண்ணத்திற்கு தகுந்தாற் போல் சில காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

தாயாரின் உடல் நிலை சீராகும். வீடு, மனை வாங்குவது விற்பது சாதகமாக முடியும். சகோதரங்கள் பொருளுதவிகள் செய்வார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.
 
திடீர் பயணங்கள் வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலையில் சென்று அமர்வீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை குடும்பத்துடன் நிறைவேற்றுவீர்கள். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். என்றாலும் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். ஓய்வெடுக்க முடியாதபடி கொஞ்சம் அலைச்சலும் இருக்கும்.
 
மையப்பகுதியிலிருந்து ஓரளவு பணவரவு உண்டு. பிரச்னைக்குரிய விஷயங்களை கையில் எடுத்து அதில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள்.
 
கன்னிப் பெண்களே! திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். பழைய நண்பர் ஒருவர் மூலமாக சில உதவிகள் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புது சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆளுமைத் திறனும், செல்வாக்கும் அதிகரிக்கும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 7, 11, 16, 15, 24 
அதிஷ்ட எண்கள்: 1, 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil