Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24
, திங்கள், 30 நவம்பர் 2015 (17:41 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.

சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனாலும் சிலர் உங்களைக் குறைக் கூறிக் கொண்டிருப்பார். அதற்காக உங்களின் உதவும் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம். ஆனால் மாதத்தின் மையப்பகுதியிலிருந்து சில நேரங்களில் கறாராகப் பேசி சிலரின் மனதை புண்படுத்துவீர்கள்.
 
பேச்சிலே காரத்தை குறைத்து கொஞ்சம் இங்கிதமாகப் பேசுவது நல்லது. பணவரவு இருந்தாலும் செலவுகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். கைமாற்றாக கொஞ்சம் பணம் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்காலம் பற்றிய ஒரு பயத்தை உண்டாக்கும். பிள்ளைகளிடம் முக்கிய குடும்ப விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை.
 
சிலர் உங்களிடம் நடிப்பதாகவும், உங்களிடம் யாரும் உண்மையான பாசம் காட்டுவதில் என்றும் சில நேரங்களில் நினைப்பீர்கள். நெருங்கிய உறவினர்கள் உங்களைக் குறைக் கூறிப் பேசுவார்கள். மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வேற்றுமொழிக்காரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
 
கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். புது நட்பு மலரும். வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.
 
கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய மாதமிது.    
 
அதிஷ்ட தேதிகள்: 6, 13, 14, 15, 24  
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, சில்வர் கிரே 
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil