Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31
, திங்கள், 30 நவம்பர் 2015 (17:10 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மனதிலே ஒரு தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கை உண்டாகும்.

அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவு நீங்கும். உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். ஒரு சொத்தை தந்து மறுசொத்து வாங்குவீர்கள். சிலர் வீடு மாற வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள்.
 
வாகனத்தை சீர் செய்வீர்கள். என்றாலும் மாதத்தின் மையப்பகுதியிலிருந்து சில நேரங்களில் சோர்வு, களைப்பு அடைவீர்கள். சிலர் உங்களை சீண்டி விட்டு, தூண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள். முன்கோபத்தில் ஏதேனும் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள்.
 
ஆனால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கும் சாதகமாகும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்வீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது முரண்டுபிடிப்பார்கள். உத்யோகத்தில் உங்களுடைய திறமைகள் பாராட்டப்படும். சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.
 
கலைத்துறையினர்களே! வருமானம் உயர வழி பிறக்கும். நெருக்கடிகளை சகிப்புத் தன்மையால் கடக்கும் மாதமிது.  
    
அதிஷ்ட தேதிகள்: 4, 1, 6, 26, 24
அதிஷ்ட எண்கள்: 2, 8
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், இளம்சிவப்பு
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி

Share this Story:

Follow Webdunia tamil