Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30
, திங்கள், 30 நவம்பர் 2015 (17:09 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களிடம் இருக்கும் சோர்வு களைப்பு நீங்கும்.

உற்சாகமாக புது முயற்சிகளில் இறங்குவீர்கள். வீடு, மனை விற்பது, வாங்குவதும் லாபகரமாக முடியும். புது வேலைக் கிடைக்கும். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார்.
 
வேற்று மொழிக்காரர்களால் நிம்மதி உண்டாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திடீர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெள்ளி ஆபரணங்கள் சேரும். தடைப்பட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை மீண்டும் தொடரும். ஆனால் திடீர் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம்.
 
கண்ணை கொஞ்சம் பரிசோதித்துக் கொள்ளுங்கள். எடைமிகுந்த பொருட்களை தூக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும்.
 
கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை புரிந்துக் கொண்டு புது முதலீடுகள் செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
 
கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். தவிர்க்க முடியாத செலவுகளால் தர்மசங்கடத்தில் திணறும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 3, 1, 9, 10, 27 
அதிஷ்ட எண்கள்: 1, 5
அதிஷ்ட நிறங்கள்: கிரே, ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil