Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (23:17 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நினைத்த காரியங்கள் சுலபமாக முடியும். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும். புது வேலை அமையும். பூர்வீகச் சொத்தை புதுபிப்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை பைசல் செய்வீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவது, வீடு மாறுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.
 
வழக்கில் வெற்றி உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீடு, மனை வாங்க லோன் கிடைக்கும். சாதுக்களின் ஆசிர்வாதம் பெறுவீர்கள்.
 
வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். என்றாலும் சிக்கனமாக இருக்க வேண்டுமென நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஆனால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! தோற்றப் பொலிவுக் கூடும். பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினர்களே! வசதி, வாய்ப்புகள் பெருகும். அனைவராலும் மதிக்கப்படும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 9, 1, 6, 10, 18, 21
அதிஷ்ட எண்கள்: 5, 9
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments