9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும்.
முகத்தில் தெளிவு பிறக்கும். எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். பணப்பற்றாக்குறை அகலும். உறவினர், நண்பர்களால் உதவியுண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். கல்யாணம் சிறப்பாக முடியும்.
குழந்தை பாக்யம் உண்டாகும். நட்பு வட்டாரம் விரியும். வீடு, மனையில் மனம் விரும்பியவாறு அபிவிருத்தி பணிகள் நடக்கும். என்றாலும் அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். வீண்பழி, சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். மற்றவர்களை நம்பி அதிரடியான காரியங்களில் ஈடுபட வேண்டாம். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும். சங்கம், இயக்கம் இவற்றில் சேருவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சியை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். பணிகளில் இருந்த தேக்க நிலை நீங்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சமயோஜித புத்தியால் சாதிக்கும் மாதமிது.