ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் அளித் த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாததிற்கான எண் ஜோதிட பலன்கள்.
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கை துளிர்விடும். முக மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பண வரவு சீராக இருக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவீர்கள்.
பிள்ளைகளை நல்வழியில் கொண்டு செல்ல முற்படுவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தால் வீண் செலவுகள் வந்து போகும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் உருவாகும்.
தலைவலி, வயிற்றுக்கோளாறு ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பணிகள் விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடக்கும். கணினி துறையினர் பரபரப்புடன் காணப்படுவார்கள். பிற்பகுதியில் நினைத்ததை சாதிக்கும் மாதமிது.
2, 11, 20, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி கிட்டும். மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பணப்பற்றாக்குறை விலகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.
வெளியூரிலிருந்து நற்செய்திகள் தேடி வரும். வீட்டை அலங்கரிப்பீர்கள். சகோதரவகையில் இருந்து வந்த மனக் கசப்புகள் விலகும். பால்ய நண்பர்களச் சந்தித்து மகிழ்வீர்கள். வருங்காலத்திற்கான திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். முன்கோபம் நீங்கும்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடக்கும். தந்தை வழி உறவினர்களிடயே நிலவி வந்த கசப்புணர்வுகள் நீங்கும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பழைய சரக்குகளை புதிய யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். கலைஞர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். மூத்த கலைஞர்களின் பாராட்டுதலை பெறுவீர்கள். விட்டதைப் பிடிக்கும் மாதமிது.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மன நிம்மதி பெருகும்.
புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்ப வருமானத்தை உயர்த்த எண்ணுவீர்கள். கணவன்-மனவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகள் பரபரப்புடன் காணப்படுவார்கள்.
தலைவலி, இடுப்புவலி இருந்தால் நீங்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்லத் தீர்வு கிட்டும். உறவினர்களின் விசேடங்களில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.
அரசு ஊழியர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உணவு, புரோக்கரேஜ், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறைமகள் வெளிப்படும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரி பாராட்டுவார். கலைத் துறையினர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். விட்டுப்போன தொடர்புகள் துளிர்க்கும் மாதமிது.
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கைத் துளிர்விடும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசுப் பணம் புரளும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். பேசில் கம்பீரம் பிறக்கும்.
உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மையுண்டு. பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். சொந்தம் பந்தங்களுக்கு மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் சந்திப்புக் கிட்டும். பாக்கிகள் வசூலாகும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். கூட்டுத் தொழிலில் மகிழ்ச்சியுண்டு. உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கோபத்தையும், குறை கூறுவதையும் தவிர்த்தால் வெற்றி பெறும் மாதமிது.
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கைத் துளிர்விடும். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பண வரவால் விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
முன்கோபத்தைக் குறையுங்கள். உடன்பிறந்தவர்களால் மனநிறைவு கிட்டும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனச் செலவுகள் வந்துபோகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அக்கம், பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் வந்து விலகும்.
எடுத்த வேலையை விரைந்து முடிக்க எண்ணுவீர்கள். சொத்துச் சம்பந்தப் பட்ட வழக்குகளை நிதானமாக கையாளுங்கள். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப்போங்கள்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தனி நபர் விமர்சனத்தை தவிர்க்கவும். கலைத் துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பெரிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை உணரும் மாதமிது.
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தின் முற்பகுதியை விட மையப் பகுதியும், பிற்பகுதியும் எதிலும் வெற்றியைத் தரும்.
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், அவர்களை நல்வழியில் கொண்டு செல்ல எண்ணுவீர்கள்.
உடன்பிறந்தவர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பழைய கடனை அடைப்பீர்கள். கொஞ்சம் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தந்தாலும் ஆதாயம் உண்டு. சொந்தம் பந்தங்களின் விசேடங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
அரசாங்க வேலைகளிலிருந்த தேக்க நிலை மாறும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனம் செலவு வைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். வேலையாட்களை அரவணைத் போவது நல்லது.
இரும்பு, மரப்பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் இருந்து வந்த கசப்புணர்வுகள் விலகும். வசக ஊழியர்களிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். கலைஞர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படுங்கள். தனித்திறமை, நிர்வாகத் திறமை அதிகரிக்கும் மாதமிது.
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் காசு, பணம் புரளும் என்றாலும் கொஞ்சம் செலவும் இருக்கும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போங்கள். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறைக் காட்டுங்கள். அவர்களின் ஆசைகள பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.
வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். அரசுக் காரியங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். தாய் வழி உறவினர்களிடம் அனுசரித்துப் போங்கள். இங்கிதமாக பேசி கடினமான வேலைகளைக் கூட முடிப்பீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு நிகழும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும்.அ க்கம், பக்கம் வீட்டாருடன் குடும்ப விடயங்களப் பற்றி சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரந்து முடிக்கப் பாருங்கள். மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்களப் பற்றி குறைக் கூறவேண்டாம். கலைத் துறையினர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கையிருப்பு கரைந்தாலும் உற்சாகம் தரும் மாதமிது.
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சகோதரவகையில் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வீண் அலைச்சல், பதற்றம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிரியமானவர்களைச் சந்தித்து பழைய நல்ல சம்பவங்களை பகிர்ந்து கொள்வீர்கள். அக்கம்,பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வீட்டை அலங்கரிப்பீர்கள்.
வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும். வேற்றுமதத்தினர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். புதிய நபர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள். சம்பளப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கலைஞர்களின் விருப்பங்கள் பூர்த்தியாகும். தாழ்வுமனப்பான்மை, தடைகள் விலகும் மாதமிது.
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு நீங்கும். அழகு, இளமை கூடும். கணவன்-மனவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு தேவயான அளவு இருக்கும். பிள்ளைகளின் தேவையறிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களால் நன்மையுண்டு.
தலைவலி, வயிற்றுவலி இருந்தால் நீங்கும். தாய்வழி உறவினர்களிடயே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டுக் கிடக்கும்.
ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். சொத்துச் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்க்க வழிகாண்பீர்கள். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களச் சந்திப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புரோக்கரேஜ், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் அதிரடி செயல்களக் கண்டு அனவரும் வியப்பார்கள். கலைஞர்களின் கைகள் ஓங்கும். அதிரடி முடிவுகளால் நினைத்ததை முடிக்கும் மாதமிது.