Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌க்டோப‌‌ர் மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30

அ‌க்டோப‌‌ர் மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30
, வெள்ளி, 30 செப்டம்பர் 2011 (20:52 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். கொஞ்சம் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். பழைய சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். அரசாங்க வேலைகளிலிருந்த தேக்க நிலை மாறும். புது வாகனம் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும்.

நட்பு வட்டம் விரியும். அண்டை அயாலாரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களையும், பங்குதாரர்களையும் அனுசரித்துப் போவது நல்லது. கமிசன் வகையால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைத் துறையினர்களுக்கு புது வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்தவைகளில் சில நிறைவேறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 4, 8, 13, 15, 22, 24, 31
அதிர்ஷ்ட எண்கள் : 2, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், மயில் நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி

Share this Story:

Follow Webdunia tamil