Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.ஆர்.ஐ.களால் திருமணம் செய்து கைவிடப்படும் பெண்கள்

Webdunia
அயல்நாடுகளில் பணியாற்றிவரும் இந்திய இளைஞர்களில் சிலர் இந்தியா வந்து மணமுடித்துக் கொண்டு தங்களோடு அழைத்துச் செல்லும் பெண்களை குறுகிய காலத்திலேயே கைவிட்டுவிடும் பிரச்சனை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் நடப்பது போலவே திருமணம் செய்துகொண்டு அயல் நாடுகளில் தங்கள் மனைவியை அழைத்துச் செல்லும் இவர்கள் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதும், தாங்கள் மணந்த பெண்கள் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு ஈடுகொடுக்க முடியாத காரணத்தைக் காட்டி விலக்கப்படுவதும் அதிகரித்து வருவதாக இப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்த அயல்நாடு வாழ் இந்திய சமூகம் குறித்தான உயர்மட்டக் குழு ஆய்வு செய்து அயல்நாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சகத்திடம் அறிக்கை தந்துள்ளது.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க மாநில அரசுகள் தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள இந்த உயர்மட்டக் குழு (HLCID) திருமணத்திற்கு முன்னரே அயல்நாடு வாழ் இந்திய மணமகனின் பணி அல்லது தொழில் குறித்தும் அவரது மூன்றாண்டுக்கால வரவு மற்றும் சேமிப்பு குறித்தும் நன்கு ஆராய்ந்த பின்னர் திருமண பந்தத்தை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது,

தன்னை மணந்தவர் கொடுமைப்படுத்துவதாகவோ, சித்ரவதை செய்வதாகவோ புகார் வந்தால் அது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தியத் தூதரகங்கள் சட்ட ரீதியான உதவிகளை செய்து வருகின்றன.

என்.ஆர்.ஐ. திருமணங்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்த தேச மகளிர் ஆணையம் கீழ்கண்ட பரிந்துரைகளை செய்துள்ளது.

1. திருமணங்கள் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்.

2. திருமணத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும் உரிய பாதுகாப்பிற்கு வகை செய்யும் வகையில் இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் அரசுகளுடன் மத்திய அரசு இருதரப்பு ஒப்பந்தங்களை உருவாக்க வேண்டும்.

3. மணமான என்.ஆர்.ஐ. ஆடவர் அந்த நாட்டின் குடிமகனாக இல்லாத நிலையில் இந்தியத் திருமண உறவு முறிவு குறித்த சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. திருமணத் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் சமரச முயற்சி அமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும்.

5. தனது திருமணம் தொடர்பான விவரங்களை மறைத்து மறுமணம் செய்யும் என்.ஆர்.ஐ. மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாடு கடத்திக் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும்.

6. திருமண பந்தத்தை தகாத வகையில் முறிக்கும் என்.ஆர்.ஐ. மீது வழக்கு தொடர்ந்து அவர்களின் சொத்துக்களையும் முடக்க வேண்டும் என்று தேச மகளிர் ஆணையம் கூறியுள்ளது.

கைவிடப்பட்ட பெண்களைக் காக்கும் அரசு நலத் திட்டம் :
< http://moia.gov.in/shared/linkimages/143.doc>
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?