Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயல்நாடு வாழ் இந்திய பெண்களுக்கான பாதுகாப்பு திட்டம்!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (19:31 IST)
அயல்நாடு வாழ் இந்திய பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் மற்றும் நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அயல்நாடுவாழ் இந்தியர்கள ், இந்தியாவை பூர்வகமாக கொண்ட அயல்நாட்டு குடியுரிமை பெற்ற பெண்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியும ். அமெரிக்க ா, பிரிட்டன ், கனட ா, அரபு நாடுகள ், ஆஸ்திரேலிய ா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விதிமுறைகள்:
· அயல்நாடுவாழ் இந்திய கணவன்மார்களால் பாதிக்கப்பட்டவர்களும ், விவாகரத்து பெறும் பெண்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
· இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும ். திருமணம் இந்தியாவில் நடந்திருக்க வேண்டும்.
· திருமணம் நடந்தபிறகு அயல்நாடு சென்று 5 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும ்.
· திருமணம் நடந்த 5 ஆண்டுகளுக்குள் கணவன்மார்களால் விவாகரத்து தரப்படும் பெண்களாக இருக்கலாம்.
· விவாகரத்து பெற்ற 10 ஆண்டுகளுக்குள் கணவனால் உதவித்தொகை மறுக்கப்படும் பெண்களாக இருக்கலாம்.
· நிதியுதவி கோரி விண்ணப்பத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். வழக்குக்க ு அதிகபட்சம் ஆயிரம் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்கப்படும ். அதுவும் அரசுசார ா அமைப்புகளின் மூலமாக வழங்கப்படும்.

இந்த உதவிகள் அனைத்தும் பெண்கள் அமைப்புகள் அல்லது அரசுசாரா அமைப்புகளின் மூலமாக வழக்கறிஞர் நியமனம ் மற்றும் சட்ட அணுகுமுறைகளுக்கு உதவிகள் செய்யப்படும். இதற்கு எந்தவித கட்டணமும ் பெறப்பட மாட்டாது.
பெண்ணுக்கு எதிரான குற்ற புகார்கள் உறுதி செய்யப்பட்டவர்கள் இத்திட்டத்தில் பயன்பெ ற முடியாது.

திட்டம் செயல்படும் முற ை:

நம்பிக்கைக்குரிய இந்திய பெண்கள் அமைப்ப ு, இந்திய பண்பாட்டு சங்கங்கள ், அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றின் மூலமாக இந்திய பெண்களுக்கு மத்திய அயலுறவு அமைச்சகம் உரிய உதவிகளை வழங்குகிறது. இத்திட்டத்தின்கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் இந்திய தூதரகத்தின் மூலமாக முதலில் பரிசீலிக்கப்படும ். அதனையடுத்த ு, அயலுறவு அமைச்சகத்தின்கீழ் சட்ட ஆலோசகர்களை கொண்ட சிறப்புக் குழு ஆய்வு செய்யும்.
கோரிக்கை சரியானது என்று உறுதிசெய்யப்பட்டபிறக ு, இந்திய அயலுறவு அமைச்சகம் உரிய சட்ட உதவி அளிக்க பரிந்துரை செய்யும். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட அமைப்பிடம் போதிய உதவிகளை பெற அறிவுறுத்தப்படுவார்கள ்.

தூதரகத்திற்கு வழங்கப்படும் நிதி அளவ ு:

இத்திட்டத்திற்காக அமெரிக்க ா, பிரிட்டன ், ஆஸ்ட்ரேலிய ா, கனட ா, அரபு நாடுகள் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அயலுறவு அமைச்சகம் தலா ரூ.40 லட்சம் ஒதுக்கியுள்ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு பிறகு இந்த ஒதுக்கீடு ரூ.2 கோடியாக அதிகரிக்கப்பட உள்ளது.

மேலும் விபரங்களுக்க ு: www.moia.gov.i n
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments