Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹெச்-1 பி விசா கட்டண உயர்வு : சாதகமும், பாதகமும்!

ஹெச்-1 பி விசா கட்டண உயர்வு : சாதகமும், பாதகமும்!

Webdunia

, சனி, 3 நவம்பர் 2007 (20:57 IST)
அமெரிக்க மக்களவை (செனட்) கடந்த வியாழனன்று ஹெச்-1 பி விசா கட்டணத்தை வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு தற்போது உள்ள 3,500 அமெரிக்க டாலரில் இருந்து 5,000 அமெரிக்க டாலராக உயர்த்தும் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் கணிதம். தொழில்நுட்பம் உடல் சுகாதாரம் தொடர்பான துறைகளில் படிக்கும் அமெரிக்க மாணவர்கள் எதிர்நோக்கும் ஊக்கத் தொகை வழங்க பயன்படுத்தப்பட உள்ளது.

இதற்கான புதிய குடியேற்ற சட்ட வரைவு மக்களவை நீண்ட விவாதத்திற்குப் பின்பு கடந்த வியாழக்கிழமை நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 59 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் கிடைத்தன. இந்த புதிய கட்டண உணர்வு புதிய மனுக்கள் மற்றும் புதுப்பித்தலுக்கு நடைமுறைக்கு வருகின்றது.

இந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்திய செனட்டர் பெர்னி சாண்ட்ர்ஸ், இந்த கட்டண உயர்வு மூலம் அமெரிக்க மாணவர்கள் 6,500 பேருக்கு தலா 15,000 அமெரிக்க டாலர் ஊக்கத் தொகை கிடைக்க வழிவகை செய்வதாக தெரிவித்தார். இத் ஹெச்-1 பி விசா கட்டணத்தை மனு ஒன்றுக்கு 10,000 அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று சாண்டர்சன் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்க வேலையாட்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில் வெளிநாடுகளில் இருந்து குறைந்த ஊதியத்திற்கு வேலையாட்களை அழைத்து வந்து பணி அமர்த்துவதுடன், அமெரிக்க தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகளை தடுக்கவே இந்த சடட் மசோதா அறிமுகப்படுத்தப்படுவதாக செனட் சபையில் சாண்டர்ஸ் விவாதத்தின்போது கூறினார்.

தொழில்நுட்பத் துறையில் உள்ள பற்றாக்குறையை எதிர்கொள்ள தற்போதுள்ள 65,000 ஹெச்-1 பி விசா என்பதை 1,80,000 ஆக உயர்ந்துள்ளது தொடர்பாக சாண்டர்சன் எதுவும் கூறவில்லை.

ஹெச்-1 பி விசா வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோச·ப்ட், ஐபிஎம் இண்டெல் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தொழில்நுடப் திறன் கொண்ட முதுகலை முன்னேற்ற பட்டப்படிப்பு படித்த வேலையாட்கள் அமெரிக்க தொழிலாளார் சந்தையில் கிடைக்கவில்லை என்பதால் அந்த நிறுவனங்கள் ஹெச்-1 பி விசா வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே சாண்டர்சின் மசோதாவை அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்கள், கல்வியாளர்கள், வர்த்தக நிறுவனங்கள், கல்வியாளர்கள். வர்த்தக குழுமங்கள் கடுமையாக குறை கூறியுள்ளன. மேலும் சாண்டர்ஸ் மசோதா தொழில்நுட்பத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள மூர்க்கத்தனமான சுமை மிகுந்த வரி விதிப்பு என்றும் அவை கூறியுள்ளன.

மேலும் சாண்டர்ஸ் மசோதா செயல்பாட்டுக்கு வரும்போது அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பணிகளை வெளிநாடுகளில் கொடுத்து செய்ய வேண்டிய நிலை தள்ளப்படும் என்றும் இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் கீழ்ப்படுத்தப்படும் என்றும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த மசோதா போட்டிச் சூழலுக்கு எதிரானதாக உள்ளதாகவும் ஹெச்-1 பி விசா வழங்கவதை விரும்பவில்லை என்பதை எடுத்துக் காட்டுவதாகவும் இதனால் அமெரிக்க வணிகம் பாதிக்கப்படும் என்று கூறியுள்ள அந்த குழுவினர் எனவே செனட் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்ற தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதா படி இனிமேல் அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை அயல் நாடுகளில் தேர்வு செய்ய ஹெச்-1-பி விசாவுக்கு மனு செய்யும் முன்பு, வேலை வாய்ப்பு தொடர்பான இணையதளத்தில் அது தொடர்பான விளம்பரத்தை 30 நாட்கள் போட வேண்டும்.

அமெரிக்க நிறுவனங்கள் அந்நாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தை மற்ற அயல்நாட்டு ஹெச்-1-பி தொழிலாளர்கள் வழங்க வேண்டும் என்று கிரேஸ்லே மற்றும் டர்பின் ஆகியோர் வலியுறுத்தினர்.

மேலும் ஹெச்-1-பி விசா அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளும் நிறுவனங்களில் தொழிலாளர் துறை எப்போது வேண்டுமானாலும் தணிக்கை மேற்கொள்ள இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil