பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக இந்தியாவுக்கான பிரிட்டிஷ் உயர்மட்ட நிர்வாகி ரிச்சர்டு ஸ்டாங் கூறினார்.
புதுடெல்லியில் நடந்த அயல்நாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் 6 ஆம் ஆண்டு மாநாட்டில் ஸ்டாங் பேசுகையில், "பிரிட்டனில் இந்திய சமூகத்தினர் பெருமளவு வசிக்கின்றனர். பிரிட்டனின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது. கல்வி, தனியார் துறைகளில் இந்த இரு நாடுகளும் கூட்டுறவு மேற்க்கொள்ளலாம்.
இந்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளன. பொது-தனியார் துறை சார்ந்த கூட்டுறவில் உலகளவில் பிரிட்டன் சிறந்த அனுபவம் பெற்றுள்ளது," என்றார்.
இரு நாடுகளும் பரந்த, ஆழமான உறவை கொண்டுள்ளது என்று கூறிய அவர், இந்தியர்களின் முதலீடுகளை வரவேற்பதாகவும், அதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தித் தருவதாகவும் அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விழாவில், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.