Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்ஆர்ஐ வரிச்சலுகைகளை மறுபரிசீலனை செய்ய தாராபூர் கமிட்டி பரிந்துரை

என்ஆர்ஐ வரிச்சலுகைகளை மறுபரிசீலனை செய்ய தாராபூர் கமிட்டி பரிந்துரை

Webdunia

முழு முதலீட்டு கணக்கு மாற்ற வசதியை அமல்படுத்தும் முன் அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு தற்போது சிறப்பு வங்கி திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று எஸ்.எஸ்.தாராபூர் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

முழு முதலீட்டுக் கணக்கு மாற்ற வசதியினை வழங்குவது குறித்து ஆராய எஸ்.எஸ்.தாராபூர் தலைமையில் கமிட்டி நியமிக்கப்பட்டது. சிறப்பு வங்கி வைப்பு நிதி திட்டங்கள் (என்ஆர்(ஈ) ஆர்ஏ மற்றும் ஃஎப்சிஎன்ஆர் ஆகிய) வழியே தற்போது வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகைகளை அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று இந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

முழு முதலீட்டுக் கணக்கு மாற்றும் வசதி (எப்.ஸி.ஏ.சி.)யை கொண்டு வருவதற்கான முன்முயற்சிகள் தொடங்கப்படுகின்ற சூழ்நிலையில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்ட அனைத்து அயல்நாடு வாழ் இந்தியர்களும் சமமாக நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்று அந்த கமிட்டி வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் என்.ஆர்.ஐ.க்களின் சிறப்பு வைப்பு நிதிக்கணக்குகளுக்கான வரிச்சலுகைகள் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.

இந்தியாவில் வரிகள் மிக அதிகமாக இருந்த போது கொண்டுவரப்பட்டவையே இந்த சலுகைகள் ஒருகாலத்தில் இருந்தது போல் இந்திய வரிகள் இப்பொழுது அதிகமாக இல்லை. இன்றைய வரிகள் மற்ற உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் குறைவாகத் தான் உள்ளது என்று இக்கமிட்டி மைய வங்கியிடம் விவாதித்துள்ளது.

மேலும் சமீப ஆண்டுகளில் மற்ற பல நாடுகளுடன் இந்தியா ‘இரட்டை வரி தவிர்ப்பு‘ ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதனால் ஒரு நாட்டில் செலுத்திய வரி அடுத்த நாட்டில் வரிவிலக்காக அமையும். தற்போதுள்ள என்.ஆர்.ஐ. திட்டங்களின் படி வைப்பு கணக்குகள் தவிர உள்ள மற்ற முதலீடுகளில் பல முட்டுக்கட்டைகள் உள்ளதாக இக்கமிட்டியால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த முழு கணக்கு மாற்ற வசதியை மூன்று கட்டங்களாக நிறைவேற்றலாம் என்று இந்த கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. 5 ஆண்டு காலத்தில் மூன்று கட்டங்களாக 2006-2007 (முதல் கட்டம்) 2007-2008 (2வது கட்டம்) 2008-2009 (3வது கட்டம்) இதனை நிறைவேற்றுவது உகந்ததாக இருக்கும் என இந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது. ஒவ்வொரு கட்டம் முடிந்ததும் அடுத்த கட்டத்திற்குள் செல்லும் முன்னதாக நிலையை முழுவதுமாக ஆராய இந்த கால அளவு உதவும் என்று கமிட்டி கூறியுள்ளது. இதன் மூலம் முதலீட்டு கட்டுப்பாட்டினை கண்காணிப்பதும் பொருளாதார சீர்திருத்தத்தினை முறையாக அளவிடுவதும் சாத்தியமாகும் என்று இந்த கமிட்டி கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil