இந்தியாவில் மிக குறைந்த செலவில் கிடைக்கும் மருத்துவங்களினாலும், உயர்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளினாலும், உடல் நலத்தை சீர்படுத்த இந்தியா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
மருத்துவ சுற்றுலாவின் நிபுணரான டாக்டர் ஆர். குமார் பேசுகையில் இந்தியாவிற்கு அயல் நாட்டிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் சொந்த நாட்டில் செலவழித்து நஷ்டப்படுவதிலும் மிகக் குறைந்த செலவே ஆகும் என்று தெரிவித்தார். கண் சிகிச்சை மருத்துவராகவும் இருக்கும் டாக்டர் குமார் இது குறித்து மேலும் கூறுகையில் கனடாவிலிருந்து வருபவர்கள் தங்கள் நாட்டில் சிகிச்சை பெறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருப்பதாலும் அங்கிருக்கும் மருத்து வசதிகளில் திருப்தி இல்லாமல் மன உளைச்சலும் அடைந்து இந்தியா வருகின்றனர். பிரிட்டனிலிருந்து வருபவர்களும் தேசிய மருத்து சேவை கழகத்தில் சிகிச்சைக்காக காத்திருக்க முடியாமல் அவர்களது உள்ளூர் மருத்துவர்களை பார்ப்பதே கடினமாக இருப்பதாகவும் வருந்துகின்றனர். மற்ற நாடுகளிலிருந்து இந்தியா வரும் மருத்துவ சுற்றுலா பயணிகளுக்கு கூடுதலான விடுமுறையுடன் ஒரு அறுவை சிகிச்சையும் செய்து கொள்ள முடிகிறது என்றார்.
இந்தியா வரும் மருத்துவ சுற்றுலா பயணிகளுக்கு நல்ல சர்வதேச தரம் வாய்ந்த பல்வேறு மருத்துவமனைகள் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் நல்ல ஒரு அனுபவத்துடன் சுகம் பெற்று தாயகம் திரும்புகின்றனர்.
இந்தியாவில் கிடைக்கும் மிகச்சீறிய செலவு குறைவான மருத்துவ வசதிகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு மில்லியன் மருத்துவ சுற்றுலா பயணிகள் இந்தியா வந்து பயனடைய முடியும் என்று இந்திய வர்த்தக கழகத்தின் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.