Webdunia - Bharat's app for daily news and videos

Install App

498ஏ-பிரிவால் அயல்நாடுவாழ் இந்திய கணவன்மார்கள் கலக்கம்!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (17:28 IST)
வரதட்சணை கொடுமைக்கு தண்டனை அளிக்கும ், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498ஏ-வை ஆண்கள ், பெண்கள் இருபாலினருக்கும் பொதுவான சட்டமாக்க வேண்டும் என்று அயல்நாடுவாழ் இந்திய கணவன்மார்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

' வரதட்சணை கொடும ை, வன்கொடுமை ஆகியவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால ், இச்சட்டம் தற்போது கணவன்மார்களையும ், அவரது குடும்பத்தினரை பலிவாங்கும் ஆயுதமாக மனைவிமார்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறத ு' என்று இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்க்ள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதேபோல ், உலகம் முழுவதிலும் பாதிக்கப்பட்ட இந்தியர்களை கண்டறியவும ், அவர்களுக்கு உதவவும் பிரத்யேக இணையதளத்தையும் துவக்கியுள்ளனர். அப்பாவிகள் பாதிக்கப்படவும் இந்த சட்டமே முக்கிய காரணமாக இருப்பதால ், '498 ஏ.ஓஆர்ஜ ி' என்று அந்த இணையதளத்திற்கு பெயர் சூட்டியுள்ளனர்.

இந்திய மனைவிகள் மட்டுமின்ற ி, வெளிநாடுகளில் வசிக்கும் மனைவிகளும் இந்த சட்டத்தின்கீழ் புகார் செய்வதால ், அப்பாவி கணவன்களை எந்த விசாரணையுமின்றி குடும்பத்துடன் போலீசார் சிறைக்கு அழைத்து சென்றுவிடுகின்றனர். இவர்களுக்கு ஜாமின்கூட வழங்கப்படுவிதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர்.

இதுபோன்ற சம்பவத்திற்கு பிறக ு அவர்கள் இணைந்து வாழ்வதற்கு சாத்தியமில்லாமல் போவதாகவும ், சட்டம் தவறாக பயன்படுத்தப்படவதை தடுக்க முறையான விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர ்.

விதிமுறைகள் அவசியம்:

இந்தியாவிற்கு சென்று 498ஏ சட்டத்தின்கீழ் புகார் கொடுக்கும் பெண்கள் இந்தியாவிலேயே இருக்க வேண்டும். ஆனால ், பெரும்பாலானோர் புகார் கொடுத்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.

புகாருக்கு உள்ளானவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு முன்ப ு, அந்நாடு சில நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக இந்தியா மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட அயல்நாடுவாழ் இந்தியரின் விபரத்தை இந்திய தூதரகத்தின் வாயிலா க, அந்நாட்டின் சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும ்.

அதன்பேரில ், முதலில் அந்நாட்டு நீதிமன்றங்கள்தான் விசாரணை நடத்த வேண்டும ். அவற்றில் உரிய நீதி கிடைக்காத நிலையில ், மேல்முறையீடு செய்யப்படும்போது மட்டுமே இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும ். அதற்கான செலவையும் அந்நாடே ஏற்க வேண்டும். இந்த நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

பாதிக்கப்படும் மனைவிமார்கள் கணவன்மார்கள ், அவரது குடும்பத்தினர் மீது 498ஏ பிரிவின்கீழ் புகார் கொடுப்பதைப்போல ், மனைவிமார்களால் பாதிக்கப்படும் கணவன்மார்களும் இந்த சட்டத்தின்கீழ் புகார் கொடுக்க உரிய திருத்தத்தை கொண்டுவர வேண்டும ். இவ்வாறு இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள கணவன்மார்கள் இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

உலகின் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகளையும ், தங்களது கருத்துக்கள ், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments