Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாவை விரைவில் பெற யு.எஸ். தூதரகம் ஏற்பாடு!

Webdunia
அமெரிக்காவிற்கு சென்று பணியாற்றவும ், படிக்கவும் விசா கோரி மனு செய்வோர் அதற்கான நேர்காணலிற்கு நீண்ட காலம் காத்திருப்பதைத் தவிர்க்க இணையத்தின் வாயிலாக நேர்காணல் அனுமதி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கான யு.எஸ். தூதரர் டேவிட் சி. மல்ஃபோர்ட் கூறியுள்ளார்!

தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தூதர் மல்ஃபோர்ட ், விசா நேர்காணலிற்காக காத்திருக்க வேண்டிய காலத்தை குறைக்கும் நடவடிக்கையாக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.

விசா கோரி விண்ணப்பித்துள்ளவர்கள் இதற்குமேல் றறற.எகள-ரளய.உடி. in என்ற இணையதளத்தில் தங்களுடைய நேர்காணலை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மல்ஃபோர்ட் கூறினார்.

இந்தியா - அமெரிக்கா இடையே முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு நெருக்கமான உறவு வளர்ந்து வரும் நிலையில ், இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் பணியாற்றுவதற்காகவும ், உயர் கல்விக்காகவும் அமெரிக்கா செல்வது அதிகரித்துள்ளது என்று கூறிய மல்ஃபோர்ட ், இந்த ஆண்டு மட்டும் 80 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க விசா கோரியுள்ளதாகக் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments