அமெரிக்காவிற்கு சென்று பணியாற்றவும், படிக்கவும் விசா கோரி மனு செய்வோர் அதற்கான நேர்காணலிற்கு நீண்ட காலம் காத்திருப்பதைத் தவிர்க்க இணையத்தின் வாயிலாக நேர்காணல் அனுமதி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கான யு.எஸ். தூதரர் டேவிட் சி. மல்ஃபோர்ட் கூறியுள்ளார்!
தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தூதர் மல்ஃபோர்ட், விசா நேர்காணலிற்காக காத்திருக்க வேண்டிய காலத்தை குறைக்கும் நடவடிக்கையாக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
விசா கோரி விண்ணப்பித்துள்ளவர்கள் இதற்குமேல் றறற.எகள-ரளய.உடி.in என்ற இணையதளத்தில் தங்களுடைய நேர்காணலை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மல்ஃபோர்ட் கூறினார்.
இந்தியா - அமெரிக்கா இடையே முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு நெருக்கமான உறவு வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் பணியாற்றுவதற்காகவும், உயர் கல்விக்காகவும் அமெரிக்கா செல்வது அதிகரித்துள்ளது என்று கூறிய மல்ஃபோர்ட், இந்த ஆண்டு மட்டும் 80 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க விசா கோரியுள்ளதாகக் கூறினார்.