Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரி தாக்கல் செய்ய புதிய படிவம் அறிமுகம்!

Webdunia
ஆண்டு வருமான வரி செலுத்துவதற்கு இதுவரை நடைமுறையில் இருந்த சரால் படிவத்திற்கு மாற்றாக 2எஃப் எனும் புதிய படிவத்தை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது!

டெல்லியில் புதிய பவடித்தை அறிமுகம் செய்த மத்திய அரசின் வருவாய்த்துறை செயலர் கே.எம். சந்திரசேகர ், இந்தப் புதிய படிவம ், விவரங்களை அளிப்பதற்கு சுலபமானதாகவும ், அதே நேரத்தில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வருமாய் மற்றும் செலவினங்களை முறையாக அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதுவரை கடைபிடிக்கப்படாத வகையில ், குறிப்பாக ஒரு தனி நபரின் செலவின விவரங்களை பெறும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் படிவத்தில் தனி நபரின் துவக்க இருப்பில் ( Opening Balanc e) இருந்து ஆரம்பித்த ு, அவருக்கு வரும் ரொக்க வருவாய் விவரங்களைப் பெற்ற ு, செலவினங்களின் விவரங்களை பதிவு செய்து இறுதியாக முடிவு இருப்பில் ( Closing Balanc e) நிறைவு பெறுகிறது.

செலவினங்களும ், வரி விலக்கு பெறும் முதலீடு விவரங்களும் அளிக்கப்படும வகையில் இந்தப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று சந்திரசேகர் கூறினார்.

இந்த ஆண்டில் இப்படிவத்தை கணினியின் வாயிலாகவோ அல்லது காகிதப் படிவத்தின் வாயிலாகவோ பயன்படுத்தலாம் என்று கூறிய சந்திரசேகர ், அடுத்த ஆண்டு முதல் கணினியில் மட்டுமே இப்படிவத்தைக் கண்டு நிறைவு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments