Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஸ்கட்டில் இரண்டு இந்தியர்கள் பலி!

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:44 IST)
மஸ்கட்டில் ஒரு வர்த்தக கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு இந்தியர்கள் பலியாகினர்.

ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் அல் குவைர் என்ற மாவட்டத்தில் 34 ஆண்டாக இயங்கி வரும் பர்னிச்சர் கடையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி கேரளா மாநிலத்தை சேர்ந்த நௌபால் ஷம்சுதின் கராயில் (22), வினோத் குமார் (34) ஆகியோர் உயிரிழந்தனர்.

தேசிய ஆய்வு மற்றும் மீட்பு குழுவின் தீவிர தேடுலுக்கு பிறகு இவர்களது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்த ு, தேசிய உள்நாட்டு பாதுகாப்பு குழு தலைவர் அழர் பின் ஹரூன் அல் கின்டி கூறுகையில ், " கட்டிடம் இடிந்த விழுந்த உடனேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர். நௌபாலின் இரண்டு நண்பர்கள் சிறு காயங்களுடன் தப்பினர ்" என்றார்.

" கடந்த ஒரு ஆண்டாக நௌபால் இங்கு வேலை பார்த்து வருகிறார். வினோத் குமார் பொருட்களை வாங்க வந்திருந்தார். முன்பு கட்டிடம் இடிவதற்கான எந்த அறிகுறிகளும் இல்ல ை" என்று விபத்து நடந்த தேஜான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமீர் அஹமத் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments