Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனை கட்ட ரூ.10 கோடி : என்.ஆர்.ஐ. மருத்துவர் உதவி!

Webdunia
அமெரிக்காவில் பணியாற்றிவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கோவையில் 300 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.10 கோடி அளிக்க முன்வந்துள்ளார்!

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் கலாநித ி, அமெரிக்காவில் குடியேறி மருத்துவப் பணியாற்றி வரும் சிறுநீரக சிகிச்சை நிபுணர் அழகிரிசாம ி, கோவை மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைத் துறையை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும ், அதற்கு ரூ.10 கோடி வரை நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

ஆனால ், கோவை மருத்துவமனையில் அதற்கான இடவசதி இல்லாததால் மருத்துவமனையை ஒட்டியுள்ள 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அங்கு மருத்துவமனையை கட்டுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும ், அதற்கான கட்டுமான வரைபடத்தை மருத்துவர் அழகிரிசாமிக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் கூறிய மருத்துவர் கலாநித ி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்குமாறு கோரி மாநில சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments