கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய குடியேற்ற விதிகள் விரைவில் மறுஆய்வு செய்யப்படும் என்று ஆஸ்ட்ரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கிரிஸ் இவான்ஸ் தெரிவித்தார்.
ஆஸ்ட்ரேலியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய குடியேற்ற விதிகள் கடுமையாக இருப்பதால், அந்நாட்டிற்குப் புலம்பெயரும் அயல்நாட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டதாகக் குற்றச்சாற்று எழுந்தது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் ஆஸ்ட்ரேலியாவில் 16,024 அயல்நாட்டவர்கள் குடியேறியுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலத்தில் 38,850 அயல்நாட்டவர்கள் அயல்நாட்டிற்கு வந்திருந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஆஸ்ட்ரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கிரிஸ் இவான்சிடம் கேட்டதற்கு, புதிய குடியேற்ற விதிகளின் கீழ் நடத்தப்படும் தேர்வு விரைவில் மறுஆய்வு செய்யப்படும் என்றார்.
மொத்தம் 42 பக்கமுள்ள வினாத்தாளை 7 பேர் கொண்ட குழு முழுமையாக மறுஆய்வு செய்யும் என்று அவர், வினாத்தாளில் பயன்படுத்தப்படும் ஆங்கிலம் அனைவருக்கும் புரியுமாறு எளிமைப்படுத்தப்படும் என்றார்.