Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டனில் முதலீடு செய்யுங்கள்... இந்தியர்களுக்கு அழைப்பு!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (13:53 IST)
பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக இந்தியாவுக்கான பிரிட்டிஷ் உயர்மட்ட நிர்வாகி ரிச்சர்டு ஸ்டாங் கூறினார்.

புதுடெல்லியில் நடந்த அயல்நாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் 6 ஆம் ஆண்டு மாநாட்டில் ஸ்டாங் பேசுகையில ், " பிரிட்டனில் இந்திய சமூகத்தினர் பெருமளவு வசிக்கின்றனர். பிரிட்டனின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது. கல்வ ி, தனியார் துறைகளில் இந்த இரு நாடுகளும் கூட்டுறவு மேற்க்கொள்ளலாம ்.
இந்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளன. பொது-தனியார் துறை சார்ந்த கூட்டுறவில் உலகளவில் பிரிட்டன் சிறந்த அனுபவம் பெற்றுள்ளத ு," என்றார்.

இரு நாடுகளும் பரந் த, ஆழமான உறவை கொண்டுள்ளது என்று கூறிய அவர ், இந்தியர்களின் முதலீடுகளை வரவேற்பதாகவும ், அதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தித் தருவதாகவும் அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விழாவில ், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments