Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுத்தர அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கு தனி இணைய தளம்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (18:32 IST)
சாதார ண, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த அயல்நாடு வாழ் இந்தியர்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்படும் வகையில் புதிய இணைய பல்கலைத் தள (போர்ட்டல ்) சேவை துவக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் வருமானம் பெறும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்தவரிசையில ், தொழிலதிபர் லட்சுமி மிட்டல ், சுவராஜ் பால ், மேக்நாட் தேசாய் போன்றவர்கள் எப்போதும் மிக பிரபலமாக உள்ளனர். இதுபோன்ற கோடீஸ்வர அயல்நாடுவாழ் இந்தியர்களின் நலனுக்காக பிரவேசி பாரதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்ட ு, பல்வேறு நிகழ்ச்சிகளும ், கூட்டங்களும் நடத்தப்படுகிறது.

குறிப்பாக இவற்றில் பங்கேற்கும் அமெரிக் க, ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோடீஸ்வர இந்தியர்கள் தாங்கள் பிறந்த பகுதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளவும ், அப்பகுதிகள் வளர்ச்சி பெற சில திட்டங்களை நிறைவேற்றவும் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்று ஆப்பிரிக் க, அரபு நாடுகளில் வாழும் சாதார ண, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த இந்தியர்களுக்கும் தனித்த அமைப்பு தேவை என்பது நீண்டநாட்களாக உணரப்பட்டுவந்த நிலையில் 'தஸ்வீர்-இ-ஹிந ்' என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இதன் ( www.tasveer-e-hind.com) இணைய பல்கலைத் தள சேவையை மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் துவக்கி வைத்தார்.

அமைப்பின் நிறுவனர் ஆஷிப் கூறுகையில ், ' இந்த இணைய தளத்தின் வழியாக சாதார ண, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த அயல்நாடுவாழ் இந்தியர்கள் தங்களது பிரச்சனைகள ், கோரிக்கைகள ், ஆலோசனைகள் ஆகியவற்றை இந்திய அரசுக்கு தெரிவிக்கலாம ்' என்றார்.

இந்த இணையத் தளம் மத்திய கிழக்கு நாடுகளிலும் பிரபலப்படுத்தப்பட உள்ளது. இந்திய அமைச்சர்கள ், தூதரகங்கள ், பல்வேறு துறைகளைச் சார்ந்த தலைமை அதிகாரிகள் ஆகியவர்களையும் இந்த இணைய வழி சேவை மூலம் தொடர்புகொள்ளும் வகையில் வசதிகள் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முயற்சி அரசுக்கும ், அயல்நாடுவாழ் இந்தியர்களுக்குமான இடைவெளியை போக்கும் என நம்பலாம். என்றாலும ், இது அரசின் முறையான அணுகுமுறையை பொருத்தே உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments