இந்திய-தென் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசா இல்லாமல் பயணிக்கும் ஒப்பந்ததிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், "இருநாடுகளுடனான உறவை மேம்படுத்தக்கூடியவர்களுக்கான விசா கட்டுப்பாட்டை நீக்க தென் ஆப்பிரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிழ்ச்சி அடையச்செய்யும்" என்றார்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், பாஸ்போர்ட் வைத்திருக்கும் இருநாட்டு நல்லெண்ண தூதர்களும் கட்டுப்பாடின்றி பயணம் செய்யலாம்.