துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை அதிகாரியாகப் பணியாற்றி வந்த தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
அபுதாபியில் உள்ள ஹம்தான் தெருவில் வசித்து வந்தவர் வைத்தியநாதன்(42). தமிழரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
இன்னும் திருமணமாகாத அவர், தான் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
வைத்தியநாதன் கடந்த ஒரு வாரமாகவே கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக அவரின் நண்பர்கள் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் கேரளத்தைச் சேர்ந்த சாய் கிருஷ்ணன் என்பவர் 9 ஆவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.