'ஃபிளை துபாய்' என்ற புதிய குறைந்த கட்டண விமானச் சேவை துபாயில் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட சுற்றுப்புற நாடுகளுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் அடுத்த ஆண்டு மத்தியில் இந்நிறுவனம் தனது விமானச் சேவையைத் துவங்கவுள்ளது.
இந்தக் குறைந்த கட்டண விமானச் சேவைக்கு தேர்வு செய்யப்பட்ட பெயர்களில் 'ஃபிளை துபாய்' என்பதை ஐக்கிய அரபு நாடுகளின் துணை அதிபர், பிரதமர், துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல்-மாக்டம் ஆகியோர் அங்கீகரித்தனர்.
இந்த விமானச் சேவை துபாயின் சுதந்திரமான கட்டுப்பாட்டில் இயங்கவுள்ளது.
ஃபிளை துபாய் நிறுவனத் தலைவர் ஷேக் அகமது கூறுகையில், 'சுமார் 20 கோடி பயணிகளுக்குப் பலனளிக்கும் வகையில் ஃபிளை துபாயின் சேவைகள் இருக்கும். இந்நிறுவனத்தின் முதல் விமான சேவை 2009 மத்தியில் துவங்கும்" என்றார்.