Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் இரண்டு இந்தியர்களுக்கு 25 ஆண்டு சிறை!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2008 (20:09 IST)
துபாய் நாட்டு தொழிலாளரை கொலை செய்த வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் இரண்டு இந்தியர்களுக்கு 25 ஆண்டுச் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

துபாயில் வேலை செய்துவந்த இரண்டு இந்தியர்கள் அந்நாட்டு ஊழியர் ஒருவரை பாலைவனத்தில் வைத்து அடித்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டனர். கொலை சம்பவம் நடந்த இடத்திற்கும ், இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்திற்கும் 3 கி.மீ., தூரம் இருக்கும் என்றும ், குற்றவாளிகள் மரபணு சோதனை மூலமாக கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் 37 மற்றும் 40 வயதுள்ள அந்த இரண்டு இந்தியர்களுக்கும் துபாய் நீதிமன்றம் 25 ஆண்டுகால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எனினும் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களின் பெயர் வெளியிடப்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments