டத்தோ சாமிவேலு மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவராக தே‌ர்வு

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2009 (12:32 IST)
மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவராக டத்தோ சாமிவேலு, 11-வது முறையாக மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பலத்த தோல்வி அடைந்த போதிலும் அவர் மீண்டும் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆளும் கூட்டணியில் மலேசிய இந்திய காங்கிரஸ் அங்கமாக இருக்கிறது. இதன் தலைவர் பதவிக்கு சாமிவேலு போட்டியிட 455 கிளைத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

அவரை எதிர்த்து போட்டியிட முயன்ற முன்னாள் துணைத்தலைவர் முத்துப்பழனியப்பனுக்கு 5 கிளைத்தலைவர்கள் மட்டுமே ஆதரவாக இருந்தனர். அதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. தேர்தலில் போட்டியிட 50 கிளைத்தலைவர்கள் ஆதரவு இருக்க வேண்டும். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக கட்சி அறிவித்தது.

73 வயதான சாமிவேலு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். அவர் கடந்த 1979-ம் ஆண்டு முதல் தலைவராக இருந்து வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

Show comments