Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அய‌ல்நாடு வாழ் இந்தியர் தினம்: 1500 பேர் பங்கேற்பு!

Webdunia
புதன், 12 நவம்பர் 2008 (04:08 IST)
சென்னையில் 2009 ஜனவரி 7 முதல் 9 வரை ந ட‌ க்கவுள்ள அய‌ல்நாடு வாழ் இந்தியர் தினம் நிகழ்ச்சியில் உலகெங்கிலும் இருந்து சுமார் 1,500 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அய‌ல்நாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் அமைச்சகம ், தமிழக அரச ு, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆ‌கியவ ை சா‌ர்‌பி‌ல ் அய‌ல்நாட ு வாழ் இந்தியர் தினம்-2009 சென்னையில் கொண்டா ட‌ ப்படு‌கிறத ு.

ஜனவரி 8-ஆம் தேதியன்று பிரதமர் மன்மோகன் சிங் துவக்கவுரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து 9-ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிறைவுரை நிகழ்த்துகிறார். அத்துடன் பிரவாசி பாரதிய சம்மான் விருதுகள்-2009-யும் வழங்குகிறார். பல்வேறு மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த விழாவிற்காக தற்போது நடைபெற்று வரும் ஏற்பாடுகள் குறித்து புது டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சிங்கப்பூர் அதிபர் தலைமை விருந்தினராக பங்கேற்க இருப்பதாக மத்திய அய‌‌ல்நாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் அமைச்சக செயலர் க ே. மோகன்தாஸ் தெரிவித்தார். மேலும் இரு நாட்டு குடியரசுத் தலைவர்களும் மற்றும் பல்வேறு நாட்டு அமைச்சர்களும் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பெரிய விழாவில் 19 மாநிலங்கள ், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்பதாக உறுதி கூறியுள்ளன. இதில் மாநில முதல்வர்கள் மாநாட ு, மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments