Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவு‌தி‌யி‌ல் இந்திய செவிலியருக்கு அபராதம்!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (13:11 IST)
துருக்க ி, சவுதி பெற்றோர்களுக்கு குழந்தையை மாற்றி கொடுத்ததற்காக இந்திய செவிலியரு‌க்க ு அபராத‌ம ் ‌ வி‌தி‌ப்பதுட‌ன ் அவர ை‌ ச ் சொந்த நாட்டிற்கே ‌திரு‌ப்‌ப ி அனுப்ப சவுதி அரசு முடிவு செய்துள்ளது.

சவுதி அரேபியாவின் நஜ்ரன் அரசு மருத்துவமனையில் துருக்கி நாட்டைச்சேர்ந்த கற்பிணி பெண்ணும ், சவுதி கற்பிணி பெண்ணும் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் ஒரே நாளில் குழந்தை பிறந்தது. இந்நிலையில ், இருவருடைய குழந்தையையும் கவனக்குறைவால் இந்திய செவிலியர் மாற்றிக் கொடுத்துவிட்டார். குழந்தை பழுப்பு (பிரவுன்) நிறமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த துருக்கி கணவர், சந்தேகத்தில் தனது மனைவியை கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டார்.

எனினும ், குழந்தையை டி.என்.ஏ., ஆய்வு செய்ததில ், அந்த குழந்தை இந்த தம்பதியருடையது இல்லை என்று தெரியவந்தது. உடன ே, துரு‌க்‌கி கணவ‌ர் நஜ்ர‌ன் மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

குழந்தைகளை மாற்றிக்கொடுத்ததற்காக இரண்டு பெற்றோர்களுக்கும் சவுதி அரசு ரூ.60 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்கியது. இருதரப்பினரும் தங்களது உண்மையான குழந்தையை பெற்றுக்கொண்டனர்.

குழந்தைகளை மாற்றிக்கொடுத்த இந்தியாவைச் சேர்ந்த செவிலியருக்கு அபராதம் விதிக்கப்பட்டு சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப அந்நாடு முடிவு செய்துள்ளது. இனிமேல் சவுதி‌யில் பணிபுரியவும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே தவறு செய்த எகிப்து மருத்துவர ், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த செவிலியர் ஆகிய இருவருக்கும் இதே தண்டனை வழங்கப்பட்டது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments