அரபு நாடான கத்தாரில் இந்தியாவில் இருந்து குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை 4.20 லட்சமாக அதிகரித்துள்ளது.
இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையைவிட இருமடங்கு அதிகமாகும் என்று அந்நாட்டு உள்துறை விவகார இணை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் நாசர் தெரிவித்துள்ளார்.
கத்தார் நாட்டின் இந்தியத் தூதராக பதவி வகித்த வரும் ஜார்ஜ் ஜோசப், லெபனான் தூதராக மாற்றப்பட்டுள்ளார். இதனால் தனது பதவிக்காலம் முடியும் முன்னர் அவர் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஷேக் அப்துல்லா பின் நாசரை சந்தித்து நன்றி தெரிவிக்க சென்றார்.
அப்போது, கடந்த ஜூலை 31ஆம் தேதி கணக்கெடுப்பின்படி கத்தார் நாட்டில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.