தற்காப்புக்காக கொலை செய்த இந்திய வம்சாவழி இளைஞருக்கு தண்டனை அளிக்கக் கூடாது என்று பிரிட்டன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய வம்சா வழியை சேர்ந்த டோனி சிங் (34) பிரிட்டனின் லங்காஷயைர் பகுதியில் வணிக கடை வைத்துள்ளார். நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிக்கு புறம்படும்போது முகமூடி அணிந்த ஒரு கொள்ளையன் தாக்க முயன்றுள்ளான். சுதாரித்துக்கொண்ட டோனி கொள்ளையனுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது, கொள்ளையனிடம் இருந்த கத்தியை கைப்பற்றி அவனது மார்பகத்தில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த கொள்ளையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
கொள்ளையன் பெயர் லியாம் கில்ரோ என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறை அறிக்கை தயாரித்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டன் மக்கள் மத்தியில் டோனிக்கு ஆதரவு பெருகி வருகிறது. தற்காப்புக்காகவே டோனி கொலை செய்ய நேர்ந்துள்ளது என்று பிரிட்டன் மக்கள் கூறுகின்றனர். டோனியை 'உள்ளூர் கதாநாயகன்' என்று வர்ணித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும் கடிதம் எழுதி வருகின்றனர்.
'தன்னை காப்பாற்றிக்கொள்ளவே உயிர் போராட்டத்தில் தான் டோனி கொள்ளையனை குத்தியுள்ளார். வேறு நோக்கம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை' என்று லங்காஷயைர் ஆலோசனை வாரியம் தெரிவித்துள்ளது.