Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவைத்தில் இந்திய விழா கொ‌ண்டா‌ட்ட‌ம்

Webdunia
புதன், 4 நவம்பர் 2009 (12:40 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல் இ‌ந்‌திய கலா‌ச்சார‌த்தை கடை‌பிடி‌க்‌கிறோமோ இ‌ல்லையோ, அத‌ன் ‌‌மீது ஏ‌ற்ப‌ட்ட ஈ‌ர்‌ப்‌பினா‌ல் வெ‌ளிநா‌ட்டு ம‌க்க‌ள் ஏராளமானவ‌ர்க‌ள் இ‌ந்‌திய கலா‌ச்சார‌த்தையு‌ம், பார‌ம்ப‌ரிய‌த்தையு‌ம் கடை‌பிடி‌க்க‌த் துவ‌ங்‌கியு‌ள்ளன‌ர்.

நா‌ம்தா‌ன் த‌ற்போது அவ‌ர்களது கலா‌ச்சர‌த்தை கை‌யி‌ல் வை‌த்து‌க் கொ‌ண்டு பூனை கை‌யி‌ல் ‌சி‌க்‌கிய எ‌லியாக‌த் த‌வி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறோ‌ம்.

ச‌ரி ‌விஷய‌த்‌தி‌ற்கு வருவோ‌ம்.. இ‌ந்‌திய‌ர்க‌ள் அ‌திக‌ம் வ‌சி‌க்கு‌ம் குவைத் நாட்டில் வருகிற 8-ந் தேதி முதல் 14-ந் தேதி முடிய ஒரு வார காலத்துக்கு இந்திய விழா நடக்கிறது.

இ‌ந்‌திய ‌விழா எ‌ன்றா‌ல், இ‌ந்‌தியா‌வி‌‌ன் ‌சி‌ற‌ப்புகளை‌க் கொ‌ண்டாடு‌ம் வகை‌யி‌ல் இ‌ந்த ‌விழா கொ‌ண்டாட‌ப்படு‌கிறது.

இந்த விழாவில் இந்திய இசைக்கலைஞர்கள், நடிகர்கள், நடனக்கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவை மத்திய அரசின் கலாச்சார துறையும், குவைத் நாட்டின் கலை, கலாச்சாரத்துறையும் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

இந்த விழா, குவைத் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இ‌ந்த ‌விழா‌வி‌‌ற்கு மேலு‌ம் ஒரு ‌சிற‌ப்பு சே‌ர்‌க்கு‌ம் வகை‌யி‌ல், இந்திய நெசவாளிகள் நெய்த காஞ்சீவரம், பனார்சி பட்டுப்புடவைகளின் கண்காட்சியும் நடக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments