ஆஸ்ட்ரேலியாவில் கத்தியால் கொடூரமாகக் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவரின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெல்பர்ன் நகரில் கிளிஃப்டன் ஒட்டலுக்கு அருகில் நேற்று காலை 6 மணிக்கு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இந்திய மாணவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்சி ஓட்டிக்கொண்டே படித்துக் கொண்டிருந்த அந்த 23 வயது மாணவரின் பெயல் ஜல்வீந்தர் சிங் என்பது இன்று நடந்த விசாரணையில் தெரியவந்தது.
தற்போது ராயல் மெல்பர்ன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜல்வீர் சிங்கின் நிலைமை இன்னும் சீரடையவில்லை என்று மருத்துவமனை அதிகாரி ரோட் ஜாக்சன் ஸ்மித் தெரிவித்தார்.
முன்னதாக, தாக்குதல் நடந்த இடங்களின் வீடியோ படங்களை நேற்றிரவு வெளியிட்ட காவலர்கள், இது தொடர்பாக 45 வயதான ஒருவரைக் கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.