Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனக்கொடுமை: இந்தியருக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவு!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (19:32 IST)
இந்தி ய‌த் தொழிலாளர்களை இனவேறுபாடுடன் நடத்தியதற்காக முன்னணி கார் தயாரிப்ப ு நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் (64 ஆயிரம் பவுண்ட ு) அபராதம் விதித்து பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த கல்மேஷ் ஷா (30), 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிட்டனில் உள்ள ஹோண்டா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் பணிப ு‌ர ிந்த நிலையில ், திடீரென்று எந்த பயிற்சியும் அளிக்கப்படாமல் தயாரிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு கழிப்பிடத்துக்கு செல்லக்கூட மேற்பார்வையாளர் அனுமதி வழங ்கா மல் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால ், ஷா உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு வேலையில் இருந்து விலகினார்.

இதுகுறித்து ஷா பிரிட்டன் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில் ஹோண்டா நிறுவனம் ஷாவுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

" இன அடிப்படையில் என்னை மூன்றாவது பிரிவு குடிமகன் போல நிறுவனம் நடத்தியதால் தான் வழக்கு தொடர்ந்தேன், பணத்திற்காக அல் ல" என்று ஷா க ூ‌ற ினார்.

ஹோண்டா நிறுவ ன‌ச் செய்தித் தொடர்பாளர் கூறுகையில ், ' நீதிமன் ற‌த் தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். ஷாவுக்கு நடத்த கொடுமை‌க்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம ்' என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments