Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய-அமெரிக்க தம்பதியினருக்கு 40 ஆண்டு சிறை?

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (17:49 IST)
இரு பணிப்பெண்களை உடல் ரீதியாகவும ், ம ன ரீதியாகவும் வேதனைக்குள்ளாக்கிய இந்தி ய- அமெரிக்க தம்பதியினருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பிறந்த மகிந்தர் முரளிதர் சப்னானி (51), இவரது மனைவி வர்ஷா (45) ஆகியோர் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். சொந்தமாக நறுமண தைலம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை வைத்துள்ள சப்னானி மிகப்பெரிய தொழிலதிபர ்.

இந்தோனேசியாவை சேர்ந்த சமீர ா, ஈனுங் ஆகிய இருவரை வீட்டு வேலைக்காக அமர்த்தினர். இவர்களை தினமும் 18 மணி நேரத்திற்கும் ஆதிகமாக வேலை வாங்கியும ், துடைப்பம ், குடையால் தாக்கியும ், காலால் உதைத்தும் கொடுமைப்படுத்தியதாக இந்தி ய- அமெரிக்க தம்பதியினர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

"25 மிளகாய்களை சாப்பிட வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். தம்பதியினர் நவீன கால அடிமைத்தனத்தை கையாண்டுள்ளனர ்" என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகளை தம்பதியினரின் வழக்கறிஞர் ஜெப்ரி ஹோப்மேன் மறுத்தார்.

ஆனால ், இந்தி ய- அமெரிக்க தம்பதியினர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில ், தம்பதியினருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments