Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவருக்கு அடி உதை!

Webdunia
வியாழன், 8 மே 2008 (14:11 IST)
ஆஸ்ட்ரேலியாவில் படித்து வரும் 21 வயது இந்திய மாணவர் மீத ு நிறவெறித் தாக்குதல ் நடத்தப்பட்டுள்ளத ு. இதனால ் அங்க ு வசித்த ு வரும ் இந்தியர்கள ் ஆத்திரமடைந்துள்ளனர ்.

டேவிட் என்று அழைக்கப்படும் இந்த மாணவர் ஆஸ்ட்ரேலியாவில் கடந்த இரண்டரை மாதங்களாக வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று ரெயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 4 பேர் இவரை வழிமறித்து சிகரெட் கேட்டுள்ளனர்.

அப்போது திடீரென நால்வரும் டேவி‌ட்டை அடித்து உதைத்து வன்முறையில் ஈடுபட்டனர். பிறகு அவரது பின் மண்டையில் பாட்டிலால் அடித்தனர். இதனால் டேவிட் மயக்கமடைந்ததாக ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கை ஒன்று கூறியுள்ளது.

சாலையின் மறு முனையில் சென்று கொண்டிருந்த மக்களிடம் உதவி கோரி டேவிட் கதறியுள்ளார். ஆனால் ஒருவரும் மனமிரங்கவில்லை.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டேவி‌ட்டிற்கு மண்டையில் தையல் போடப்பட்டுள்ளது. முக வீக்கம் ஏற்பட்டு மூக்கிலும் பயங்கரக் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இந்திய மாணவரும் பகுதி நேர கார் ஓட்டுனருமான ஜல்விந்தர் சிங் தாக்கப்பட்டதைத ் தொடர்ந்த ு தற்போத ு இன்னொர ு இந்தி ய மாணவரும ் தாக்கப்பட்டுள்ளார ்.

ஆஸ்ட்ரேலியாவில் தொடர்ந்து இதுபோன்று இந்தியர்கள் நிறவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments