அயல்நாடு வாழ் இந்தியர்கள் இசை அமைப்பான ஹம்சத்வனியுடன் இணைந்து இசை, நடன நிகழ்ச்சி சென்னையில் நடந்து வருகிறது.
இதில் ஜெர்மன் நாட்டின் தூதரக அதிகாரி இர்வின் வென்ட்லான்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், தமிழக காவல் துறையின் கூடுதல் இயக்குநருமான நடராஜ் துவக்கி வைத்தார்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு, சொந்த மண்ணில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் சிறப்பான வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில், தொடர்ந்து பல்வேறு கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
மொத்தம் 54 கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது கலைத்திறனை உள்ளூர் கலைஞர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர்.