அயல்நாடுவாழ் இந்திய பெண் ஒருவர் தனது கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் செய்துள்ளார்.
நெதர்லாந்தை சேர்ந்த பிரியா அகர்வால் (24), அஜய் அகர்வால் ஆகியோரது திருமணம் கடந்த 2007, ஜனவரி 29-ம் தேதி நடந்தது.
இருவரது பெற்றோரும் தொழில் நண்பர்கள். திருமணத்திற்கு பிறகு பூனாவிலேயே பிரியா தங்கினார்.
இந்நிலையில், திருமணமான நாள் முதலே அஜய், அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக பிரியா பூனா காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதன்பேரில் அஜய் குடும்பத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பிரியா பூனாவில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.